BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, April 16, 2011


தகக்கும் அவனுக்குத் தெரிவதில்லை,
இங்கு,
தனை வெறுக்கும் நரர்களே உண்டு என,
நாமாய்த் தேடும் இருளைத் தவிர்க்க,
நமக்காய்த் தன்னை எரிக்கின்றான்,
தானாய் கரம் தரும் தகைமை இவனுக்கு..
ஆயிரம் கரத்தில்தான் எத்தனை தெரேஸாக்கள்
ஆயினும் தருகிறோம் அவளுக்கிட்ட உமிழயே ..
ஆனாலும் அவன் கடன் பணி செய்து கிடப்பதே..

2 comments:

நிரூபன் said...

கவிதையில் பிரதி உபகாரம் எதிர்பாராது பணி செய்யும் சூரியனினை விளித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்??. கொஞ்சம், புரிந்தும், புரியாமலும் இருக்கிறது உங்கள் கவிதை சகோதரி,


ஆயினும் தருகிறோம் அவளுக்கிட்ட உமிழயே ..
ஆனால் அவன் கடன் பணி செய்து கிடப்பதே..//

இதனைக் கொஞ்சம் விளக்கினால் அழகாக இருக்கும் என நினைக்கிறேன்.

Aishwarya Govindarajan said...

இவ்வரியின் மறைமுகப் பொருள்,எப்படி அந்த மனிதர் ஒருவர் தன்னலம் கருதாத தெரேசா தன் காப்பகத்திற்க்காக பொருள் கேட்டபொழுது உமிழ்நீர் அளித்தாரோ அதற்கு நிகராய் நாம் இந்த வெயிலினை வெறுக்கின்றோம்,ஆனாலும் அதையும் பொருட் படுத்தாது அது தனது பணியினை செவ்வனே செய்து வருகிறது அந்த தெரேசா அம்மையாரைப் போலவே என்பதாகும்.
//Kavidhai variyin suvai arttham puriyum varai// :-)