BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, April 8, 2011



இரவுகள் விடியாது,
முடியாது போகட்டுமே..
இலக்கியமாய்,
இசைக் கனவாய்.. 
உனதாய் எனதாய்,
நம் கணமாய்,
எவ்வாறாய்,
அது நமக்கு இருப்பினும்..

சிறிதாய் விழி அணைந்தால்,
இதழ் அணைத்து,
எழுப்பி விடு..
கூந்தலுடன் உன் விரலும்,
பொத்தான்களுடன் என் விரலும், 
 ஊடலும் கூடலும் பேச..  
கதைத்திருப்போமே நாம்,
பொருள் உள்ளதும் அற்றதுமாய்.

வெட்கம் கொண்டுவிட்டால்,
பிற நெருக்கம் தோன்றிடினும்
மன நெருக்கம்  மறைந்துவிடும்..
தேவை மன நெருக்கமே அந்நொடிக்கு, 

ஆதலால் சிறிதாய்,
பரிகாசம் செய்துவிடு..
உன்னவளாய் உன்னருகில்,
ஒண்டிக் கிடந்திடுவேன்.


விழித்தபடி கனவுகளும்,
விழிநுனிச் சிரிப்புகளும்,
சிரிப்பிடைச் சீண்டல்களும்,
சீண்டத் தொடர் சிணுங்கல்களும்,
பொருளில்லை அழகுண்டு,
அப்பொருட் பிழை கணத்திற்கு...

.விடியலில் விழித் துயிலும்,
அழகான நொடியினிலே,
பிழை நீக்கி முடித்திடிவோம்,
 இறவாத இலக்கியத்தை.. 
 
விடியாது போகட்டுமே,
நம் இறவாத இரவுகள்.


3 comments:

நிரூபன் said...

கவிதைக்கு தலைப்பே Untitled ஆ....?

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், வாழ்வில் பயனற்ற, இறந்து போன இரவுகளை, விடியாமலே இருக்கலாம்.....எனும் ஆதங்கத்துடன் கவிதையினைப் படைத்திருக்கிறீங்க..
கவிதை இரவுகளினை எப்படி விடியாத பொழுதாக மாற்றலாம் என்பதனைப் படிமங்களினூடாகப் பேசி நிற்கிறது.

Aishwarya Govindarajan said...

nandri :-)