BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, July 26, 2011

எப்பொழுதும் உன் கற்பனைகள்..


இரவுகள் இங்கு உண்டு
கரங்களை குவித்தபடி,
அதனை இதழ்மேல் சாய்த்தபடி,
நிலா முற்றத்தில் நடந்தபடி,
வான் தாரகைகளை நோக்கி,
அதை எண்ணுவதாய் நடித்தபடி,
முழு நிலவு அதனில்,
பிரிந்திருக்கும் உந்தன் 
முகத்தினைத் தேடிய
இரவுகள் இங்கு உண்டு  

விடியல்கள் இங்கு உண்டு
நீராடி நல்லுடை சூடி,
உன் விழிப்புக்காய் உன் அருகே அமர்ந்திருக்க,
மார்கழியாய் உரைந்துபோன கன்னங்களில்,
ஆடித்தென்றலாய் உன் விரல் தீண்ட,
அதிகாலைக் கனவுகள்,
நாணத்தில் முடிந்த  
விடியல்கள் இங்கு உண்டு.

காலைப் பொழுதுகள் இங்கு உண்டு
அளவாய் சமைத்துவிட்டு,
இடையே சிறு சண்டையிட்டு,
கொஞ்சலிட்டு,
வம்பும் செய்து,
இறுதியில் அவசரமாய் அலுவலகம் கிளம்பும்,
தாயிலும் தந்தையிலும்,
உன்னையும் என்னையும் தேடிய,
காலைப் பொழுதுகள் இங்கு உண்டு

பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு
புத்தகத்தின் மெலிதான பக்கங்கள் சேருமிடம்,
வரிகளைப் படித்தபடி,
எனையும் அறியாது,
மையற்ற விரல்கொண்டு,
உன் பெயரினை எழுதச் சென்ற
பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு 

நன்மாலைகள் இங்கு உண்டு
இசையொன்றே சர்வமாய் உணர்ந்திருக்கும் கணத்தில்,
ஏதோ ஒரு பாடலை,
மனதில் எண்ணி முணுமுணுக்க,
காதலும் இருக்காது அதில்,
காமமும் இருக்காது,
இருப்பினும்,
வரியடுத்து வரும் உயிரொத்த இசைத்துளியில்
உன் அருகாமையைத் தேடிய
நன்மாலைகள் இங்கு உண்டு.

 

2 comments:

நிரூபன் said...

எப்பொழுதும் உன் கற்பனைகள்..//

வித்தியாசமான ஒரு கவி நடையில், வாழ்க்கையின் ஒவ்வோர் படி நிலைகளையும் ஒவ்வோர் பொழுதுகளாக காதலனின் உள்ள அசைவுகளில் கண்டு தெளியும் காதலியின் உணர்வுகளைத் தாங்கி இங்கே படைக்கப்பட்டிருக்கின்றது.

Phoenix said...

LOVELY!!! :)