BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, May 7, 2011

நட்பு இரண்டும் பேசுகையில்,
உரு உனது இல்லாது போனாலும்..
உன் பெயரேனும் தோன்றிடுது,
அவர்களிடத்தே,
ஒருத்தியை மற்றொருத்திக்
கேலிகள் செய்வதுமாய்,    
மறைமுகமாய் நீ அவளதென்று,
அவள் கூறும் பொழுதிலும்..
அந்நட்புக்காய்  உடன் சேர்ந்து,
புன்னகை செய்தாலும்,
மௌனித்து இருந்தாலும்,
அவ்விடத்தின்று நகர்ந்தாலும்,
எவரும் அறியாது கண்ணீர்ப் பெருகிடுது..
குறுக்கிடும் தான்மையும்,
குருதியோடும் குறிக்கோளும்,
என்னில் உணர்ந்த,
வேறு பல காரணமுமாய்..
என ஏனோ மறைத்திடுது,
எவரிடமும் அதைக் கூறாது.
இயற்கையும்,
என் இசை மட்டும்,  
அறிந்த இக்கதையை..

4 comments:

பனித்துளி சங்கர் said...

தங்களின் படைப்புகள் எதற்கும் தலைப்பென்பதே இல்லையே !? ஒரு புதுமையான அனுபவம் கவிதை வாசித்ததில் . பகிர்ந்தமைக்கு நன்றி

நிரூபன் said...

குறுக்கிடும் தான்மையும்,
குருதியோடும் குறிக்கோளும்,//

குறுக்கிடும் தன்மையும், என்று வந்தால் அழகாக இருக்கும்,

நிரூபன் said...

இசை மட்டும் அறிந்த, நட்பின் பின்னே மறைந்துள்ள கதை,
இங்கே உணர்வின் வெளிப்பாடாய் கவிதை வரிகளினூடு புலப்படுகிறது.

Aishwarya Govindarajan said...

நன்றி நிரூபன்
நன்றி பனித்துளி சங்கர் :)

@நிரூபன்,அது தான்மை என்பதே ஆகும்,தான்மை என்பதற்கு ego என்று பொருள் உண்டு..