BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, December 12, 2009

இசைத்தகடு..


உலகை வசியமிட்டவள்
உனக்குள் இன்று அடிமையாய்..
சுதந்திரம் இன்றி.. 
எனினும்,
நீ தீண்டவே  அவள் இசைக்கிறாள்..!!

அறுபது வரை.. !!

இதோ அறுபது
ஆனால்,
கரை தொடும் அலைக்கு
ஏது எண்ணிக்கை
 சின்ன குழந்தைகள் அல்ல,
சிலைகளும் கூறும் உன் பெயரை
சூரியனுக்கு பிரதி இல்லை
உன் வாய் பிறக்கும் சொற்களுக்கும் கூட
சுகாயின் அதிவேகம்
உன் நடை வேகத்துக்கு  தலைவணங்கும்
ஓய்விற்கு எதிர்ச்சொல் உன் உழைப்பு
இரும்புதோல் போர்த்த எந்திரன் நீ.. 
ஆம்..!!
மனிதம் மிக மிக்க எந்திரன் நீ


->பிறந்தநாள் நல வாழ்த்துக்கள்
 


 

Sunday, November 15, 2009

சிறுதுளிகள் ..

மண்ணில் விழும் சிறுதுளிகள்
படர்கின்றன..!!
என்னுள் நீ படர்ந்ததுபோல் 
மன்வாசமென்ன,
நாணும் சிறு பெண்மையோ?!
வான் மழை நீரதனை ,
தன்பால் ஈர்க்க...!!
உன்னுள் எனை ஈர்த்ததுபோல்..!
சந்திக்கும் வேலை சிறிதாயினும்..
இரண்டறக்கலக்கிறது..!!
நீ,
நான் என்று ஆனது போல்..!!

Tuesday, November 10, 2009

கண்ட நாள் முதல் ..!!

கண்ட நாள் முதல் ,
ஓய்வில்லை என் கண்களுக்கு
கனவிலும் தேடுகிறது உன்னை;

கண்ட நாள் முதல்,
செல்லபெயர் இடுகிறேன்
சிறு எறும்புகளுக்கு கூட ;

கண்ட நாள் முதல்,
என் நண்பர்கள்
தபால்காரர்கள் ;

கண்ட நாள் முதல்,
உன் வீட்டு ஜன்னலோரம்
தேவி தரிசனத்திற்கான என் கோவில்..;

கண்ட நாள் முதல்,
மிளகாயில் இனிப்பு
சற்றே குறைவு..;

மருத்துவனும் அறியவில்லை
இந்நோயின் நிலை
கண்ட நாள் முதல் ..

Thursday, November 5, 2009

விடைபெறுகிறேன் நட்பே ...!!!

எவன் சொன்னான் கவியவன்
காதல் தோல்வி கவிதை தருமென..
இதோ என் கவிதைவரி..
காதலல்ல மூடனே..
நட்பிற்காக..!!
இழந்த என் நட்பிற்காக,
கண் வழி சிறுதுளியாய்
ஆனால் இன்று மட்டும்
கரிக்கவில்லை ,
ஏனோ கசக்கிறது..
புல்வெளியில் இருவர்,
கைகோர்த்து நடக்க..
ஏனோ உன் ஞாபகம்
மனதிடையே வந்து செல்ல
கவி வரைகிறேன் நான்
விழி வழியே.. 
                             -சமர்ப்பணம் என் நட்பிற்கு..
   

Thursday, October 29, 2009

நட்பீசம்

வள்ளுவமும் வால்மிகியும்
புரிந்த எனக்கு
புரியவில்லை
நட்பிலக்கியம்...
எனை அறியாத  
பீத்தோவனை 
பலமுறை புகழ்ந்தேன்,
புகழத்தெரியவில்லை எனக்கு,
உனது  கடைசிபக்க கிறுக்கல்களை. 
கடவுளிசமும் மார்க்சிசமும்
புலப்பட்ட எனக்கு
புலப்படவில்லை,
உனது அன்பீசம்.
உயிரற்ற  லட்சிய குதிரைகளை விவரித்த நான்
கேட்டதில்லை
உன் நாய்குட்டியின்,
நிலை பற்றி..
இருப்பினும் ஏன் இந்த கரிசனம் உனக்கு
ஒருவேளை இதுதான்
நட்பீசத்தின் நியதியோ..
மனமுவந்து  செய்கிறாய்
பலனைஎதிர்பாராமல்..
திருப்பிட மறுக்கிறேன்
அது எனக்கு கடமையாய் தெரிவதால்..
புரியவில்லை எனக்கு
நட்பிலக்கியம்.. !!! 
 

Sunday, October 25, 2009

தனிமை எனது உறவு..

எதுவுமற்றவள் நான்
இறை...!!
உறவுகளை வெறுக்கிறேன்,
இதோ என் பயணம்..
தனிமையை நோக்கி,
ஆனால்..
தனிமையும்.
உறவாய் தோன்றுகிறது
எனக்கு..
சிற்சிலநேரங்களில்..

Wednesday, October 21, 2009

தனித்துவம் நீ


உனக்கென்று ஒரு செயல்,
உனக்கென்று ஒரு மனம்,
உனக்கென்று ஒரு குணம்,
தனித்துவம் ஆகிறாய்
இதனால்..
அரைக்கோப்பை காபி,
கூட்டநேரிசலுடன் கூடிய
அதிநவீனப்பேருந்து பயணம்,
சிறுகவள மதியசோறு ,
இன்விசிபில் பவர்களை உள்ளதென்று நம்பும்
பல்லாயிரத்தில் ஒருத்தி,
என்னை போல்...
ஆனால்,
நட்பு எனும் ஒரு சொல் காட்டுகிறது
உனை எனக்கு
தனித்துவமாய்..!!!

->happieeeeee b'day charu ;)

Friday, October 9, 2009

நானுமென்ன பாரதியோ

உலகம் உணராததால் ,
அன்று..
காணி நிலம் பாடியவன்,
மண் மறைந்த மழைத்துளியாய்
மக்கிப்போனான்..!!
உறவுகள் உணராததால்,
இன்று..
கடல்மனர்க் கானல் நீராய்
மறைந்து போகிறேன் நானும்..
நானுமென்ன,
தற்கால பாரதியோ...!!!

Friday, September 4, 2009

கடவுள் இருக்கிறாரா...??!!

சூரியன் உன் கைவசம்..
பொதி மேகம் விலக்கும்,
சக்தி உன்னில் இருந்தால்..!!
காற்றையும் தடுக்கலாம்..
வலுவுள்ள மரம் நீயானால்..!!
கடல் ஆழம் அறியலாம் ,
நங்கூரம் ஒத்த மனம் இருந்தால் ..!!
உயிர் நின்றும் உயிர் வாழ்வாய்,
பிறர் வாழ நீ விழைந்தால்..!!
இவை அனைத்தும் எட்டிடுவாய்;
உன் கனவு உயிர் பெற்றால்..
கனவுக்கு உயிர் கொடு..
உயிர் கொடுத்தால்,
நீயும் கடவுளே..!!
மனிதா..
நீயும் கடவுளே...!!

Wednesday, September 2, 2009

காதலிக்க மறந்தாய் காதலிக்காக...!!!

மாலை நேரம்..
மழை மேகமும் ,
மண் வாசமும்,
காதல் பேசி கரைய
நான் எண்ணியிருந்தேன் உன்னை
என் மனதில்..
ஜன்னலிடை அமர்ந்தபடி..
தொட்டு சென்ற தென்றல் சொன்னது..
மிகவும் அவனை நினையாதே
என்று !
உனக்கு விக்கல் வருமாம் ஆதலால்..
தவிர்த்தேன் ..
உன்னை நினைப்பதை,
மறக்கவில்லை..
என் மனதை அறிந்தவன் ஆயிற்றே நீ ,
செய்தாய் அங்ஙனம்..
தவிர்க்கவில்லை..
மறந்திட்டாய்,
எனை நினைப்பதை,
முற்றிலுமாய்..