BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, August 27, 2010

கடவுள்..
எல்லைகளற்றவன் என்றோம்,
அவனை..
இன்று ஏனோ..
கடையுள் இருக்கும்
வத்திகளுக்கிடயே
சுருங்கிவிட்டது,
அந்த எல்லையற்றதன்மை..    

Thursday, August 26, 2010

இறந்தகாலமும்,
எதிர்காலமும்,
நிகழ்காலத்தில்...
முதிறும் சிறிதும்,
சாலையில்..
பஞ்சுமிட்டாய் பரிமாற்றங்கள்..

Monday, August 23, 2010

ஒரு மாலை..மழைக்கால நேரம்..

வீட்டில் உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை..வீட்டில் இருந்தால் கூட ஒரு இடத்தில் அமர்ந்திருக்க மனம் வராது..உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்துகொண்டிருப்பேன்.காரணமே  இல்லாமல்(ஆம் காரணமே இல்லாமல்தான்,வீட்டில் ஏதாவது வேளை இருந்து வெளியில் சென்றுவர வேண்டுமென்றாலோ அல்லது அருகாமையில் இருக்கும் சொந்தங்களை சந்திக்க வேண்டும் என்றாலோ என்னுடைய சோம்பேறித்தனம் என்னுடன் ஒட்டிக்கொண்டுவிடும்,இவர்கள் சொல்லி நாம் கேட்பதென்ன என்ற சோம்பேறித்தனம்) .இப்படி இருக்க,எனக்காக மழை வாசலிலும்,வீட்டு முற்றத்திலும் பெய்துகொண்டிருக்கும்பொழுது என்னால் எப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும். வீட்டில் உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை.வெளியே கிளம்பிவிட்டேன்.எங்காயினும் செல்வதென்றால் என் மிதிவண்டியில்தான் செல்வது வழக்கம்.TVS இருந்தும் BSA -வை ஓட்டுவதில் இருந்த மகிழ்ச்சி எனக்கு அதில் இருந்ததில்லை ,ஆனால் மழையில் பொறுமையாய் நனைந்திட,நமக்கு சைக்கிள் சரிபடாது என்று நடராஜா சர்வீசை துவக்கிவிட்டேன்.தோழி ஒருத்தி வீட்டுக்கு சென்றாகிவிட்டது.அவள் வீட்டு தோட்டத்தில் நானும் அவளும் அமர்ந்து மிக நேரம் பேசிக்கொண்டிருந்தோம்,அவளுக்கு மழை பிடிக்காது என்பதால் அவள் ஷெட்-இல் அமர்ந்துகொண்டுவிட்டாள்.அவளுடன் எங்கள் பள்ளிநாட்கள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு,மழையில் அமர்ந்தபடி கையில் அவள் அம்மா தந்த சாக்லேட் கேக் சாப்பிட்டுக்கொண்டு எங்கள் மாலை நேரத்திற்கான திட்டங்களையும் போட்டாகிவிட்டது.(இதை படிக்கும் சிலபேருக்கு இப்பொழுது நிச்சயமாக "stomach burnings of india" ஆகிக்கொண்டிருக்கும்).இங்கு "சிலபேர்" என்று சொன்னதை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள் எதற்கு என்று பின்னால் கூறுகிறேன்.வீட்டிற்கு வந்து அம்மா கூறாத வேலைகளையும் "வெளியே செல்லலாம்", என்ற காரணத்தால் நானே செய்தேன்.பிறகு ஆசை தம்பியுடன் அமர்ந்து ஒரு படம் பார்த்தாகிவிட்டது (ஆமாம் சார்,ஆசை தம்பி...அந்த டிவி ரிமோட்   அவன் கைக்கு போயிட்டா அவளோதான் சார்).ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை எங்கள் மாலை நேர திட்டம் அதைபற்றிதான் இங்கு கூற வந்தேன்.மாலை hi -fashion -இற்கு சென்று ரக்க்ஷா பந்தன் பரிசு வாங்க திட்டமிட்டிருந்தோம்.மாலை ஆறு மணிக்கு கோவில் வழியாக அந்த அரை ஈர கற்களின் மீது நடந்து சென்றோம்(அம்மா கொடுத்த குடையை அவர்கள் வீட்டில் வைத்துவிட்டேன்).கோவில் வழியாக பாதி தூரம் நடந்திருப்போம் சிறிதாக மழை பிடித்துக்கொண்டுவிட்டது. கற்கள் மேல் ஆங்கான்கே நீர் தேங்கி இருக்க அவள் "ஐஷு அதன் மீது நடக்காதே என்று சொன்னபோழுதே அதன் மீது நடந்து சென்றேன்.இடையே அவள் புலம்பல்கள் "ஒன்னு செய்யாதேன்னு சொன்னா செய்வ!!உன்ன மாத்தவேமுடியாது"..SVS -இற்கு சென்று கோபி-65 சாப்பிட்டுவிட்டு hi -fashion -இல் பரிசை வாங்கிக்கொண்டு திரும்பினோம் மழை பலமாக பிடித்துகொண்டு விட "ஐஷு உன்னாலதான் இன்னிக்கு முதல் முறையா மழைல நனையறேன்..உங்களுக்கெல்லாம் மட்டும்தான் இப்படியெல்லாம் தோணும் அப்நார்மல் கேஸ் சுமீத்-உம் இப்படிதான் மழைல நனையறதுக்கு சைக்கிள் எடுத்துட்டு சுத்துவான்.சொல்ற பேச்ச  கேக்கறது கிடையாது..நீங்க எல்லாமே ஒரு வித்தியாசமான கேஸ்" என்றாள்.அவர்கள் கூறுவது கேட்பதற்க்கு நன்றாக தோன்றினாலும் சிலசமயம் இவர்கள் முட்டாள்களோ என்று யோசிக்க தோன்றும். பிறகென்ன,சற்று யோசித்து பாருங்கள் யார் அப்நார்மல் என்று.இப்படி கூறுபவர்கள்தான் அப்நார்மல்கள் என்று தோன்றும்.நாங்களெல்லாம் மிக அரிதாக தோன்றும் நார்மல்கள்.அவளிடம் திருப்பி ஒரு கேள்வி கேட்டேன்."ஒருவேளை இந்த குடை எதுவுமே இந்த  உலகத்துல கண்டுபிடிக்கலேன்னா என்ன செஞ்சுருப்ப?" என்று.அவள் "உன்கிட்ட பேசி ஜெயிக்க  முடியாது ஏதோ பண்ணு" என்றாள் ஆனால் அவளிடம் எதிர்பார்த்த விடை அதுவன்று.நீங்களே   யோசித்து பாருங்கள் ஒருவேளை அந்த குடை என்னும் சமாசாரமே இந்த உலகில் இல்லையென்றால்?! கண்டிப்பாக அந்த மழையில் நனைந்துதானே சென்றிருப்போம்.ஆனால் குடை என்னும் அத்தியாவசியம் இருப்பதால் அதை உபயோகப்படுத்தும் எண்ணம் நம்மிடையே. இது மழை விஷயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே,யாராவது ஒருவர் அமைதியாக சில நேரம் இருந்தால் அவர் alien-லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுவிடுவர்,சத்தம் என்பதே நாம் உருவாக்கிய வார்த்தைதானே அதனால்தான் மூங்கில் குழாயிலிருந்து வரும் காற்றுக்குமட்டுமே இசை என்று பெயரிட்ட நாம் மௌனத்தை வெறும் மெளனமாகவே பார்க்க பழகிவிட்டோம்,அதுவும் ஒரு இசை என்று தங்களை நார்மல் என்று சொல்லிக்கொள்பவர்கள் மனம் ஏற்க மறுக்கின்றது,இவர்களை பொறுத்தவரை மௌனம் என்பது ஒரு செயலற்ற தன்மை.வெள்ளைலிருந்து பிறந்தவைதான் மற்ற நிறங்கள் ஆனால் வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல என்பதுபோல்தான் இதுவும் .இசைக்கு காதல், காமம்,குரோதம்,ஆச்சரியம் மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களை கொடுத்துவிட்டு மௌனத்திற்கு அடையாளத்தை மாற்றிவிட்டோம்.காரில் செல்பவர்கள் காலில் செருப்பின்றி ஒருவர் செல்வதை பார்க்கும்பொழுது என்றோ ஒரு நாள் அவர் மூதாதையர் நெருப்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு அறைக்கோமணம் கூட  கட்டியிராமல்தான் நடந்தார்கள் என்பதை  மறந்துவிடுகின்றனர் .அதனால்தான் அக்கால மனிதர்களை நாம் காட்டுமிராண்டிகள் என்று பட்டியலிட்டுவிட்டோம்.அட அவர்களும் நாமும் எதில் மாறிவிட்டோம்? raymonds, lakme தவிர ,அவர்களைப்போலவேதான் நாம் வாழ்வை சொகுசாகிக்கொள்ள நித்தம் ஏதாவது ஒன்றை  கண்டுபிடித்துகொண்டிருக்கிரோம்/ தேடிக்கொண்டிருக்கிறோம்  அதனூடே இயற்கையாய் இயற்கையிநூடே இருப்பதை  ரசிக்க அனுபவிக்க இங்கே பலர் தவறிவிடுகிறோம் (இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நான் "சிலபேர்" என்று சொன்னதன் அர்த்தம்) நாம் மனிதம் இல்லை சார் ,சற்று நாகரிகப்பட்ட காட்டுமிராண்டிகள்.யோசித்தேன் "வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போனால்  திரும்பப்பெற இயலாதது அதனால் அதை வாழ்ந்துவிடு" என்று எவனோ ஒருவன் சொன்ன வரிகளை,அந்த வரிகளுக்கு பின்தான் எவ்வளவு அச்சம் புதைந்துகிடக்கிறது  மனித இனத்தின் மொத்த அச்சமும் .இதை பற்றி பேசிக்கொண்டுபோனால் ,மனித இனம் வாழ்வில் எட்டியது மலையா? மடுவா? என்ற கேள்வியில்தான் கொண்டுவிடும்.ஆனால் நாம் இன்னும் மனித இனமாகவே மாறவில்லை  என்பது அந்த நெருப்பு பிறந்த சிக்கி முக்கி கல்லில் சிராய்ந்துபோன  ஒரு உண்மை. கேள்வியில் சிறு திருத்தம் "சற்று நாகரீகப்பட்ட காட்டுமிராண்டிகள்  இனம் வாழ்வில் அடைந்தது மலையா?மடுவா?".இதற்கும் விடையில்லை.ஒரு நிமிஷம், இதே மழை  நாளைக்கும் வருமா சார்?!..நம்ம ரமணன் என்ன சொல்லறாரு?!.   Wednesday, August 18, 2010

நான் ஏங்கும் அரவணைப்பை
நீ மறுத்திடினும்,
உன் நிலை எண்ணியே நான் இங்கு இருக்கிறேன்..
இருப்பேன்..
எழுதல் முதல் துயில் வரை..
துயில் புகும் கனவுகளில்..
நாட்களின் சிறு அடிகளிலும்,நொடிகளிலும்..
உன்னவள் எண்ணாத பொழுதுகளிலும்,
உனை எண்ணி இருப்பேன் நான் இங்கு ,
அணைந்தாலும்,
அந்த எண்ணங்கள் உனை நீங்கா..
அரணாய் காக்கும்..
நீயும் அறியாது..
நான் விரும்பும் அவன்..
உன்னுள் இருக்கும் அவன்..
அவன் அடிகளிலும் நொடிகளிலும்..
அவனாய் அவன் இறுதிவரை இருக்க..
-,
-வாயோடு மறைந்திடும் வரிகள் இவையில்லை
நீ அவ்வாறு நினைந்தாலும் வருத்தம் எனக்கில்லை
ஏனில் எவரும் தரமுடியா அன்பு எனது
உன்மீதானது..
அது பாமரரின் வரிகள் போல் வாயோடு போகாது..
நாடிகளில் வேரூன்றி இருந்திட..