என்ன மாயம் இது,
காற்றில் விரல்கள் சிம்போனி இசைக்க..
வைரவரிக்கவிஞன் சிலைவடித்த வரிகளுக்கு..
உயிரோட்டமாய் நீயும் நானும்..!!
கண்டது ஓர் கனவாகி,
செல்லமாய் எனையே நான் தட்டிக்கொள்ள...
இதழோரம் வளையும்
அந்த சிறுஅசைவு,
இவள் என்ன பித்தோ?
என ஐயமுற...
நடனம் புரிகிறேன் நான்
கனவுலகில் நீ மீட்டிய
நரம்பிசைக்கு...!!!
Thursday, February 11, 2010
சிம்போனிகளின் சங்கமத்தில்...!!
Posted by Aishwarya Govindarajan at 11:33 AM 1 comments
Saturday, December 12, 2009
இசைத்தகடு..
உனக்குள் இன்று அடிமையாய்..
சுதந்திரம் இன்றி..
எனினும்,
நீ தீண்டவே அவள் இசைக்கிறாள்..!!
Posted by Aishwarya Govindarajan at 4:46 AM 0 comments
அறுபது வரை.. !!
இதோ அறுபது
ஆனால்,
கரை தொடும் அலைக்கு
ஏது எண்ணிக்கை
சின்ன குழந்தைகள் அல்ல,
சிலைகளும் கூறும் உன் பெயரை
சூரியனுக்கு பிரதி இல்லை
உன் வாய் பிறக்கும் சொற்களுக்கும் கூட
சுகாயின் அதிவேகம்
உன் நடை வேகத்துக்கு தலைவணங்கும்
ஓய்விற்கு எதிர்ச்சொல் உன் உழைப்பு
இரும்புதோல் போர்த்த எந்திரன் நீ..
ஆம்..!!
மனிதம் மிக மிக்க எந்திரன் நீ
Posted by Aishwarya Govindarajan at 3:41 AM 0 comments
Sunday, November 15, 2009
சிறுதுளிகள் ..
மண்ணில் விழும் சிறுதுளிகள்
படர்கின்றன..!!
என்னுள் நீ படர்ந்ததுபோல்
மன்வாசமென்ன,
நாணும் சிறு பெண்மையோ?!
வான் மழை நீரதனை ,
தன்பால் ஈர்க்க...!!
உன்னுள் எனை ஈர்த்ததுபோல்..!
சந்திக்கும் வேலை சிறிதாயினும்..
இரண்டறக்கலக்கிறது..!!
நீ,
நான் என்று ஆனது போல்..!!
Posted by Aishwarya Govindarajan at 8:53 AM 0 comments
Tuesday, November 10, 2009
கண்ட நாள் முதல் ..!!
கண்ட நாள் முதல் ,
ஓய்வில்லை என் கண்களுக்கு
கனவிலும் தேடுகிறது உன்னை;
கண்ட நாள் முதல்,
செல்லபெயர் இடுகிறேன்
சிறு எறும்புகளுக்கு கூட ;
கண்ட நாள் முதல்,
என் நண்பர்கள்
தபால்காரர்கள் ;
கண்ட நாள் முதல்,
உன் வீட்டு ஜன்னலோரம்
தேவி தரிசனத்திற்கான என் கோவில்..;
கண்ட நாள் முதல்,
மிளகாயில் இனிப்பு
சற்றே குறைவு..;
மருத்துவனும் அறியவில்லை
இந்நோயின் நிலை
கண்ட நாள் முதல் ..
Posted by Aishwarya Govindarajan at 8:56 PM 0 comments
Thursday, November 5, 2009
விடைபெறுகிறேன் நட்பே ...!!!
எவன் சொன்னான் கவியவன்
காதல் தோல்வி கவிதை தருமென..
இதோ என் கவிதைவரி..
காதலல்ல மூடனே..
நட்பிற்காக..!!
இழந்த என் நட்பிற்காக,
கண் வழி சிறுதுளியாய்
ஆனால் இன்று மட்டும்
கரிக்கவில்லை ,
ஏனோ கசக்கிறது..
புல்வெளியில் இருவர்,
கைகோர்த்து நடக்க..
ஏனோ உன் ஞாபகம்
மனதிடையே வந்து செல்ல
கவி வரைகிறேன் நான்
விழி வழியே..
-சமர்ப்பணம் என் நட்பிற்கு..
Posted by Aishwarya Govindarajan at 6:17 AM 0 comments
Thursday, October 29, 2009
நட்பீசம்
வள்ளுவமும் வால்மிகியும்
புரிந்த எனக்கு
புரியவில்லை
நட்பிலக்கியம்...
எனை அறியாத
பீத்தோவனை
பலமுறை புகழ்ந்தேன்,
புகழத்தெரியவில்லை எனக்கு,
உனது கடைசிபக்க கிறுக்கல்களை.
கடவுளிசமும் மார்க்சிசமும்
புலப்பட்ட எனக்கு
புலப்படவில்லை,
உனது அன்பீசம்.
உயிரற்ற லட்சிய குதிரைகளை விவரித்த நான்
கேட்டதில்லை
உன் நாய்குட்டியின்,
நிலை பற்றி..
இருப்பினும் ஏன் இந்த கரிசனம் உனக்கு
ஒருவேளை இதுதான்
நட்பீசத்தின் நியதியோ..
மனமுவந்து செய்கிறாய்
பலனைஎதிர்பாராமல்..
திருப்பிட மறுக்கிறேன்
அது எனக்கு கடமையாய் தெரிவதால்..
புரியவில்லை எனக்கு
நட்பிலக்கியம்.. !!!
Posted by Aishwarya Govindarajan at 4:24 AM 0 comments

