BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, May 18, 2011

ஒரு காதல் என்பது...

                          “காதல் மிகக்  கண்மூடித்தனமானது”,இந்த  வரியை கூறியவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,கண்டுபிடித்தால் அவரிடம்  கேட்க  ஒரு  கேள்வி  கைவசம்  உள்ளது . “உங்களைப்  பொறுத்தவரை காதல் என்றால்  என்ன?”,எனக்கு ஏனோ அவரிடம் மட்டுமிருந்துதான் அதற்கு சரியான விடையைப்  பெறமுடியும் என்ற நம்பிக்கை.எனக்கு தெரிந்த பலரிடம் கேட்ட  போது அவர்கள் காதல் என்பதைத் தாண்டி சினிமாவால் எவ்வளவு பாதிக்கப்  பட்டுள்ளார்கள் என்பதே மிகவும் புலப்பட்டது.

                ஆக அவர்கள் பாணியிலேயே சென்றால்,எத்தனை சினிமாக்கள் காதல்  என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்டியுள்ளது?என்று பார்த்தால்.காதல்  என்றாலே அங்கு கண்டிப்பாக ஆண் பெண் இருந்தாகவேண்டும் என்று கை  எழுத்து இடப்பாடாத சட்டத்துடந்தான் படங்களே  இருக்கின்றன.ஒரு எழுத்தாளன் அவன் எழுத்துடன் ஒன்றி லயித்து உருகொடுத்து ,வெளிக்கொணர்வது. ஒரு திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனன் தான்,  அக்கதைக்குள் கலந்து தான் நிலை மறந்து,தன கீழ் பணி புரியும் அனைவரையும், மனம் ஒன்று படுவதுபோல், ஒருங்கிணைத்து ,அவர்களிடம்  காட்டும் அன்பு, பாசம், கோபம் ,கட்டளை மூலமாக அவர்களையே அடி  பணியவைத்து ,அத்தரஐனத்தில் அக்கருவை உருவாக்கி வெளியுலகிற்கு அளித்து அந்நிலையில் அவ்விடத்தில் அவனையே  ஒரு கடவுள் ஆக்கிவிடுவது.ஒரு  இசை வித்தகன்  தான்  நிலைமறந்து  கண்  மூடி  கண்ணீர்  சுரக்க  தாய்  மடி  அரவணைப்பு போல்,கலவின் கடைநிலை போல்,அவனையே அவ்விடத்து தாய் சேய் உற்றது ,விட்டது என அனைத்துமாக்கி கிடப்பது.ஒரு நாட்டியத்தில்  ஒருவரிடமிருந்து அதீதமாக அவரை வெளி உலகிற்குப்  புலப்படுத்தும் /உணர்விக்கும்  நயமும் பாவமும்.எத்தனைப் பேருக்கு இவையும் காதலாகப்  புலப் பட்டிருக்கும்.எத்தனை சினிமாக்கள் இதனையும் கருக்களமாக்கி காதல் படங்கள் என்ற வகைமையில் காண்பித்திருக்கும்.யோசியுங்களேன்!,விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதை எழுதுகையில் சட்டென எண்ணத்தில் தோன்றியது, உங்களுக்கு நேரமிருந்தால்,நீங்களும் ,என்னையும் சேர்த்து இங்கு உள்ள பலரைப் போல் மனோதத்துவம் உளவியல் என்று புலம்புபவராயின்.சிந்துபைரவி படத்தின் அம்மூன்று முக்கியக் கதாப்பாத்திரத்தை மட்டும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன்.அழகாய்ப்  பலது மனதிருக்குப் புலப்படும்.அது போல் பல உதாரணம் கூறுகிறது எண்ணம்.

          தாயே,நீ என்னதான் சொல்ல வர இப்போ? என்று கேட்பவர்களுக்கு,
முதல் சந்திப்பில் “ஒஹ்!அதுவா அது எனக்கு ரொம்ப பிடிக்குமே “ என்பது  பத்தாவது சந்திப்பிலும் “ஒஹ்!அதுவும் பிடிக்கும்”என்று பிடிப்பதோடு நின்றுவிடாமல் ,முப்பதாவது சந்திப்பில் அவன் செயலில்,அவள் உணர்ந்து ஒன்றி தானும் கலந்திருப்பது,அது கலை ஆயினும் காமம் ஆயினும் எதுவாயினும் அதுவே நான் இங்கு கூறுவது.அது எண்பது சந்திப்புகள் வரையும்  அதைத் தாண்டியும் அவ்வாறாயின் அதை விட அழகான காதல் இருக்க  முடியாது.ஆனால்,“அவளுக்காக அது என்னவென்று கூட தெரியாவிடினும் அது எனக்கு மிகப் பிடிக்கும்”, என்று யோசிக்கத் தொடங்கினால் அந்நொடியிலிருந்து நீ உன்  சுயத்தைத் தொலைக்கிறாய்.உன் சுயத்தை  உணர்வதற்க்காய் காத்திருக்கும் வேறு ஒரு ஆன்மாவுடனும் சேர்த்து அவளது  ஆன்மாவையும் பொய்க்க வைத்துவிடுகிறாய்.இது அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் பொருந்தும்.

                             இது,இரு மனிதர்களுக்கு இடையே தோன்றுவதே காதல் என்று  வரையறுத்து வைத்துக்கொண்டவர்களுக்கும் சரி, என் காதலை நான் கலையில் மட்டுமே உணர்கிறேன்,கலையிலும் உணர்கிறேன் என்று  கூறுபவர்களுக்கும் சரி எவ்வாறாகிலும் வார்த்தையை மட்டும் வேறு எடுத்துப் பொருத்தினால் மேல் சொன்ன கூற்று பொருந்தும்.கலை உனக்குப்  பிடிக்குமாயின் பிடிப்பதோடு மட்டும் உறைந்துபோனால் அது காதல் அல்லவே. அனைவர் பாணியில் கூறினால்“ அது அப்படியே நம்மள கரைச்சு உருக்கி  காணாடிச்சுடனும்”.ஆன்மாவை உணர்வது எனலாம் இதனை, சுருக்கமாக.என்ன உணர்வதுதான் எளிதில் நிகழ்வதில்லை.                            
                                    நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில்  எறிவது மட்டுமா தவறு,தவறான சுருதி சேர்த்தலும்தானே,சொல்லடி என் சிவசக்தி. J       

2 comments:

நிரூபன் said...

,கண்டுபிடித்தால் அவரிடம் கேட்க ஒரு கேள்வி கைவசம் உள்ளது . “உங்களைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன?”//

உண்மையில் சினிமாக் காதல் பலரின் வாழ்வினைச் சீரழித்திருக்கிறது. அத்தோடு யதார்த்தம் நிறைந்த உணர்வுகளின் வெளிப்பாடான உண்மைக் காதல் இந்தச் சினிமாக் காதல் மூலம் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

நிரூபன் said...

காதல் பற்றிய அலசல் அருமை சகோ, ஆன்மாவினைச் சுய தரிசனம் செய்யும் வகையில் காதல் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.