கல்லூரி முடிந்துவிட்டதால் தற்காலிகமாக சொந்த ஊரில் சிறிது நாட்கள் முகாம்.கேட்ட செய்திகளில் பலது பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த சிலருக்கு திருமணம் என்பதே.மகிழ்ச்சிதான்,ஒரு குடும்பத்தை சுயமாக நிர்வகிக்கும் பொறுப்பு வந்துவிட்டால் திருமணம் செய்வதில் தவறில்லைதான்.என் நெருங்கிய தோழிக்கும் திருமணம்,அடுத்த மாதமாம்,"சார் என்ன செய்யறார்"-னு கேட்டதற்கு இதுதான் பதில் டெல்லியில் இனிப்புகள் மொத்த விற்பனைக் கடை வைத்திருக்கிறார் பன்னிரெண்டாவது ஃபெயில் என்றாள்.படிப்பறிவற்ற அவள் அண்ணனுக்கு விரைவில் திருமணம் செய்யும் பொருட்டு இவளுக்கு திருமணம்,தனக்கு விருப்பம் இல்லையெனினும் வேறுவழி இல்லை என்றாள்.அவளது அதைரியத்தையும் தயக்கத்தையும் எண்ணி ஆத்திரம்தான் வந்தது.நேரில் சந்தித்தால் நான் அவள் மனதை மாற்ற முயற்சிப்பேனாம் அதனால் என்னை சந்திப்பதையும் தவிர்த்துக் கொண்டிருக்கிறாள்.
இது ஒரு புறம் இருக்க,இந்த சாதி மத பேதம் ஒழிந்தது,முன்னொரு காலத்தில் இருந்தது போல் கொடுமை இப்பொழுது நிலவவில்லை என்று கூறும் மகான்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.மேடம்!நீங்கள் உங்கள் நட்பை,பெற்றொரோ அல்லது வேறு எதோ உறவினருக்கோ அறிமுகம் செய்து வைப்பீர்கள்,நட்பு அந்த பக்கமாக நகர்ந்தவுடன் இங்கே நம் உறவு ஒரு கேள்வி கேட்கும் "அவங்க நம்மவங்களா?சும்மா சாதாரணமாத்தான் கேக்கறேன்''.ஏதாவது அக்கம்பக்கதினரிடம் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென "உங்களவங்கள்ள இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் உண்டா?"என்பது.இது போன்ற கேள்விகளை இதைப் படிக்கும் நீங்கள் சந்தித்திருக்காவிடினும் பள்ளி நண்பர்கள் தொடங்கி சொந்த பாட்டி வரை என சிறுவயதிலிருந்தே,இதோ இங்கு இதனை புலம்பும் நான் சந்தித்தது உண்டு.இது போன்ற கேள்விகளுக்கு மூன்றுவிதமாக நாம் பதிலளிக்கலாம்,கேட்பதற்கு ஏற்ற பதிலை மட்டும் கூறிவிட்டு நகர்ந்துவிடுவது.இது போன்ற கேள்விகள் வேண்டாமே?என்று பதில் அளிப்பது,ஏன் பதிலே அளிக்காமல் இருப்பது கூட ஒருவிதமான பதில்தான்.மூன்றையும் அமல்படுத்தியாகியும்விட்டது.நாகரிகம் வளர்ந்து வருவதற்க்கு ஏற்ப "மனரீதியாக சாதியக் கொடுமை" என்கிற அளவிற்கு வளர்ந்துவிட்டது.எம்.ஜி.ஆர் முடிந்து ரஜினி முடிந்து விஜய் என்பது போலத்தான் இதுவும்.
பல நாள் கழித்து பள்ளித்தோழியை கோவில் சென்றபோது சந்தித்தேன்,நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது அவளிடம், "என்ன கேவலமான சமூகம் இது?"என்றபொழுது."எதுக்கு இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ்" என்றாள்.
நீயே பாரேன்?,குழந்தைய கிள்ளிவிட்டு அழகு பாக்கற மாதிரி,தனக்கு இந்த மாதிரி ஒன்னு நடக்கறத கூட தட்டிக் கேட்க முடியாத ஒருத்தி,வெளியில கருனை பாசம் அது இது-னு பேசினாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலையில் இந்த மாதிரி கொடூரத்தை புதைச்சு வெச்சுட்டு இருக்கற இந்த மனுஷங்க.இந்த அழுக்கோட அழுக்கா,சூழ்நிலை அதுஇது-னு காரணம் சொல்லி கலந்துடற நாம.இப்படி ஒரு அழகான சமூகம்,நீ,நான்,நாம எல்லாரும். பாரதியாருக்கு தெரியல எதிர்காலத்துல தன்னொட வரிகள் எல்லாம் சினிமாவுக்கும் காதல் செய்யறவனுக்கும் காதல் செய்யப்போறவனுக்கும்தான் பயன்படப்போகுதுனு, மனுஷர் எழுதி இருக்கமாட்டார்,எழுதி இருந்தாலும் நம்ம கண்ணுல படற மாதிரி வெச்சு இருக்க மாட்டார்", என்றேன்.
அவள்,"இது எல்லாம் இப்படித்தான்,மாத்தமுடியாது,நீயும் இதை திருப்பி திருப்பி சொல்லறதுலயும் ஒன்னும் நடக்கப் போறது இல்ல"என்று ஒரு வரியில் முடித்துவிட்டாள்.
இதில் யதார்த்தம் என்பது எந்நிலை?!எவர்நிலை?!.புரியவில்லை.
இது ஒரு புறம் இருக்க,இந்த சாதி மத பேதம் ஒழிந்தது,முன்னொரு காலத்தில் இருந்தது போல் கொடுமை இப்பொழுது நிலவவில்லை என்று கூறும் மகான்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.மேடம்!நீங்கள் உங்கள் நட்பை,பெற்றொரோ அல்லது வேறு எதோ உறவினருக்கோ அறிமுகம் செய்து வைப்பீர்கள்,நட்பு அந்த பக்கமாக நகர்ந்தவுடன் இங்கே நம் உறவு ஒரு கேள்வி கேட்கும் "அவங்க நம்மவங்களா?சும்மா சாதாரணமாத்தான் கேக்கறேன்''.ஏதாவது அக்கம்பக்கதினரிடம் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென "உங்களவங்கள்ள இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் உண்டா?"என்பது.இது போன்ற கேள்விகளை இதைப் படிக்கும் நீங்கள் சந்தித்திருக்காவிடினும் பள்ளி நண்பர்கள் தொடங்கி சொந்த பாட்டி வரை என சிறுவயதிலிருந்தே,இதோ இங்கு இதனை புலம்பும் நான் சந்தித்தது உண்டு.இது போன்ற கேள்விகளுக்கு மூன்றுவிதமாக நாம் பதிலளிக்கலாம்,கேட்பதற்கு ஏற்ற பதிலை மட்டும் கூறிவிட்டு நகர்ந்துவிடுவது.இது போன்ற கேள்விகள் வேண்டாமே?என்று பதில் அளிப்பது,ஏன் பதிலே அளிக்காமல் இருப்பது கூட ஒருவிதமான பதில்தான்.மூன்றையும் அமல்படுத்தியாகியும்விட்டது.நா
பல நாள் கழித்து பள்ளித்தோழியை கோவில் சென்றபோது சந்தித்தேன்,நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது அவளிடம், "என்ன கேவலமான சமூகம் இது?"என்றபொழுது."எதுக்கு இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ்" என்றாள்.
நீயே பாரேன்?,குழந்தைய கிள்ளிவிட்டு அழகு பாக்கற மாதிரி,தனக்கு இந்த மாதிரி ஒன்னு நடக்கறத கூட தட்டிக் கேட்க முடியாத ஒருத்தி,வெளியில கருனை பாசம் அது இது-னு பேசினாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலையில் இந்த மாதிரி கொடூரத்தை புதைச்சு வெச்சுட்டு இருக்கற இந்த மனுஷங்க.இந்த அழுக்கோட அழுக்கா,சூழ்நிலை அதுஇது-னு காரணம் சொல்லி கலந்துடற நாம.இப்படி ஒரு அழகான சமூகம்,நீ,நான்,நாம எல்லாரும். பாரதியாருக்கு தெரியல எதிர்காலத்துல தன்னொட வரிகள் எல்லாம் சினிமாவுக்கும் காதல் செய்யறவனுக்கும் காதல் செய்யப்போறவனுக்கும்தான் பயன்படப்போகுதுனு, மனுஷர் எழுதி இருக்கமாட்டார்,எழுதி இருந்தாலும் நம்ம கண்ணுல படற மாதிரி வெச்சு இருக்க மாட்டார்", என்றேன்.
அவள்,"இது எல்லாம் இப்படித்தான்,மாத்தமுடியாது,நீ
இதில் யதார்த்தம் என்பது எந்நிலை?!எவர்நிலை?!.புரியவில்
2 comments:
\\இதில் யதார்த்தம் என்பது எந்நிலை?!எவர்நிலை?!.புரியவில்லை\\
அதனால தான் தலைப்பே வைக்கவில்லையா பதிவுக்கு ! ;)
appadiyum irukkalaam :))
Post a Comment