அதிகாலை ஒளி அதை
ஜன்னல் வழி நோக்கிவிட்டு..
மீண்டும் குறுகிக்கொள்ள,
கண்கள் உறங்கிவிடும்..
நீ அங்கு இருந்திருந்தால்..?
பாடலிடை தோன்றும்
வரிகள் சில கேட்கையில்,
இதழோரம் தோன்றும்..
வெட்கங்கள்.
நீ அங்கு இருந்திருந்தால்..?
நட்பு குழாமுடன்
கோப்பை காபிக்கள்..
அதில்,
தேநீர்கரண்டியால்..
உருவற்ற ஓவியங்கள்..
சிந்தை,
அது எங்கோ சென்றிருக்க..
நீ அங்கு இருந்திருந்தால்..?
உறவுகள் ஒன்றாய்
கலந்திருக்க..
நினைவுகளாய் புகைப்படங்கள்,
அவர்தம் உறவுடன்
அவரவர் அமர்ந்தபடி ..
நீ அங்கு இருந்திருந்தால்..?
நண்டும் நரியும்,
கரங்களிடை ஊற என
நினைவில் நிழலாடும்,
சிறுவயது விளையாட்டும்,
சேர்ந்தொலிக்கும் சிரிப்பொலியுமாய்..
நட்புடன் நிழலனைத்தும்,
தற்போது நிஜமாய்..
நீ அங்கு இருந்திருந்தால்..?
வலப்பாதம் அதை அழகாய்
அம்மி மீது அவள் வைக்க..
மெட்டியிட்ட பின் நிமிர்ந்து
அழகாய் அவன் பார்வை..
விடையாய் இவளது ,
நானப்புன்னகை..
நீ அங்கு இருந்திருந்தால்..?
கருப்பைமேல் செவிவைத்து,
கேட்டிரா இசைகேட்கும்..
தந்தையெனும் பூரிப்பில்
அவளது சற்றே வளர்,
முதல் குழந்தை..
அவன்,
நீ அங்கு இருந்திருந்தால்...?
அவளும் அவனுமாய்,
கேள்விக்கணை பலதொடுக்க..
நகைத்தபடி பலபற்றி
அவன் விடையளிக்க ..
பெருமிதம் சிறிதுகொள்ளும்
பிஞ்சுகள் அவ்விரண்டும்..
நீ அங்கு இருந்திருந்தால்..?
நண்பர்கூட்டமென்று
பிறர் சொல்ல,
அழகு குடும்பமென்று
நட்பு வியக்க,
நமது அங்கு இருந்திருந்தால்..?
Wednesday, December 29, 2010
Posted by Aishwarya Govindarajan at 2:15 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல கவிதை, நல்ல நடை, ஆனா எனக்கு ஒன்னும் புரியல அதை பத்தி கவலைப்படாதீங்க, இன்னும் எழுதுங்க
தமிழ் மணத்தில் இணைத்து விடுங்கள் இன்னும் பிரபலமாகும்
@Unmaivirumpi
kavidhai variyin suvai artham puriyum varai :)
Post a Comment