
பாரதியின் கண்ணம்மா போல் அவள்-ஷாமா வீரமும் காதலும் கருனையும் எல்லையற்றதாயும், அளவற்றதாயும் உள்ளவள்.பட் பட் என்று வெடிக்கும் எழுத்தாளர் திருச்செல்வன்.மிகவும் உணர்ச்சிவசப்படும் பெண்ணாக தாயாக இந்திரா,புரட்சி புரட்சி என்று வெடிக்கும் தம்பிக்கு தமக்கையாக "ஊருடன் ஒத்து வாழ்" கொள்கையைக் கடைபிடிக்கும் ஒருத்தி,கிராம நகர வாழ்க்கைக்கேற்ப தன் வாழ்விலும் உருவிலும் தோன்றும் மாற்றத்தை அழகாய் வெளிப்படுத்தும் தாத்தா.சுற்றி நிகழும் அவலங்களை கண்டு அந்நேரம் மட்டும் மனதிற்குள்,ஒரு மாற்றத்திற்க்காக ஏங்கும் ஒரு குடிமகனாக,டாக்டர்.கடவுள் யாரென்று தெரியும் ஆனால் அவனைப் பற்றிப் படித்ததில்லை,தெரிந்ததைவைத்துக் கொண்டு அவனைத் தேடுகிறேன் என்னும் மனநிலை கொண்ட குழந்தை அமுதா,நிஜமாகவே அமுதம்.படம் நெடுக நறுக்கென்ற வசனங்களில் இயல்பாக ஆனால் சுருக்கென்று தோன்றும் மணிரத்னம் படத்திற்கே உரிய அழகு,சுஜாதாவைத் தவிர யாரால் தரமுடியும்.வசன உச்சரிப்பிற்க்கு தகுந்தவாறு அந்த பின்னனி இசை.இளையராஜா இசை மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் அந்த ஆன்மாவினை உணர முடியும் என்று உணரவைத்த படங்களில் இதுவும் ஒன்று.ஆன்மாவைத் தேடுகிறாயா?!அதோ,அந்த குழல் ஓசைதான் அதன் தொடக்கம்.இருளும் வெண்மையும்,வெறுமையும் முழுமையும் போல்தான் இப்படத்தில் பல இடங்களில் தோன்றும் குழலும் அதைத் தொடர்ந்து வரும் கீபோர்டும்.அத்தகைய ஆன்மாவிற்கு உருவம் அந்த கேமிரா எனலாம்.போரும் பேசுகிறது,புத்தமும் பேசுகிறது.
தாய் என்பவள் யார்?,அனைத்திலும் முதிர்ச்சி மிக்கவள் இல்லை அவள்,தியாக உள்ளத்தின் மொத்த உருவம் இல்லை அவள்.அன்னை இல்லை அவள்,அம்மா!.திருமணம் குடும்பம் என்று தான் கண்ட சுழலில் தானே முக்கியப் பாத்திரமாகிவிடும் ஒருத்தி.தன் சரிபாதியை விட தன் பிள்ளைகளிடமே அதிகம் அன்னியோனியத்தை உணருபவள்.அதுவும் பெண் பிள்ளையாயின் அவளே இவளுக்கு தோழி, ஆதி முதல் அந்தரங்கம் வரை அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் தோழி,ஒரு காலத்தில் தானும் மகளாக இருந்தவள்,அந்த பிஞ்சு மனம் இறுதி வரை மாறாதவள்.

தந்தை மகள் உறவு?!,அதன் அழகு,வெளிப்பாடு,புனிதம் அனைத்தையும் உணர்ந்துவருபவள் நான்,அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம்,தந்தைக்கே உண்டான அந்த முதிர்ச்சி,தாயன்பை விட எதோ ஒரு விதத்தில் பெரியதாகவே தோன்றும் அந்த பாசம்.இவற்றை தன் வரிகளால் பக்கங்களில் அழகாய் அளந்துவிடும் வைரமுத்துவின் பேனா ,அதைத் தன் குரல்களில் அளந்துவிடும் சின்மயீயும்,ஜெயச்சந்திரனும்;என்ன ஒரு உணர்வு அந்த இரு குரல்களிலும்,அதைக்கேட்டுக்கொண்டு கண் மூடி ஒரு ஓரமாய் அமர்ந்துவிடத்தோன்றும்,தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த குரல்களில் சின்மயீயினதும் ஒன்று எனலாம்.கதைக்கரு வேறாயினும் காதலை மேலோட்டமாகத் தொட்டு செல்கிறது,பறவைகள் பறக்கும்பொழுது அந்த சிறகுகள் அதன் உடல் தொட,தோன்றும் ஒரு மென்மை போல,நான்-எண்ணம் நீ-உருவம் என்பது போன்ற மென்மை.சட்டெனத் தான் நனைந்து விடுகிறது நெஞ்சம் அந்த மென்மையில்.இது அனைத்தையும் தாண்டி மண்ணுடன் மனம் கொண்ட உறவைப் பேசும் இடங்களில் மனமும் காணும் விழியும் இனைந்து இளகிவிடும்.வெள்ளைப் பூக்கள் பாடல் ஒரு அமைதி உணர்வையும்,என்றேனும் ஒரு நாள் அவ்வரிகள் மெய்யாகாதா?! என்ற ஏக்கத்தையும் விட்டுச்செல்லும் கேட்கும் ஒவ்வொரு முறையும்,நூற்றாண்டின் மிகச் சிறந்த வரிகளுள் இப்பாடல் வரிகளும் ஒன்று எனலாம் .இறுதிகாட்சி உடல் என்றால் பின்னணி இசை அதற்கு உயிர்,கலங்கவைத்துவிடும்.
ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்.

கண்ணத்தில் முத்தமிட்டால்-கண்ணம்மா
அமுதம் சுரக்குதடி!
2 comments:
\\ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்\\
சூப்பர் ;-)
நன்றி :-)
Post a Comment