சுற்றி இருப்பவர்களின் எண்ணங்கள் என்பது பல நேரங்களில் பல விதமாக மாறுகிறது..நேற்று நன்றாக பேசியவள் இன்று முகம் திருப்பிகொள்ளுவாள்..ஊரில் அனைவருக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நானும் அவர்களுடன் சேர்ந்து அந்த நபரை வெறுக்க தேவையில்லை..நேற்று என் மனம் தெளிவாக இருக்கிறது என்று கூறியவள் இன்று நேரம் போக்கவே புலம்புவாள்..நேற்று ஒருவர் செய்த காரியம் இன்று எனக்கு பிடிக்காமல் போகலாம்..நேற்று முகம் பார்த்து அனைவர் மத்தியிலும் புன்னகைத்தவன் இன்று அதே அனைவர் மத்தியிலும் கண்டும் காணாது செல்லுவான்..நேற்று உன் கூற்று மிகச்சரி என்று சொன்னவன் இன்று அதே கூற்றை எதிர்ப்பான்..இவர்கள் என்னிடம் முறைக்கிறாள் ,புலம்புகிறாள்,ஒதுக்குகிறான்,எதிர்க்கிறான் என்பதற்காக நானும் அவர்களிடமிருந்து விலக முடியாது.அதற்கக்காக அவர்கள் கூற்றுடன் நான் ஒத்துபோகிறேன் அல்லது அவர்தம் கூற்றை மதிக்காது இருப்பதற்காகவே நான் சிலவற்றை செய்கிறேன் என்பது தவறு,ஏனில் அத்தருணங்களில் இவர்களைப்பற்றியதான என் எண்ணங்கள் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபடுகிறது. எண்ண மாற்றங்களும் அவர்தம் நடவடிக்கைகள் மாறுவதும் மனித இயல்பு.இதுவே நிலை என்பது என் ஆணித்தரமான எண்ணம்,அவ்வளவே.இந்த எமது எண்ணமானது பலருக்கு பிடிக்காமல் சென்றதுண்டு பலருக்கு பிடித்ததுண்டு,பலருக்கு பித்தென்று தோன்றியதுண்டு.அதற்காக என் நிலையிலிறிந்து நான் மாற இயலாது.ஏனில் என் இந்த சிறிய வாழ்வில் என் எண்ணங்கள் படி வாழவே எனக்கு இங்கு நேரமில்லை ஆக பிறர் எண்ணங்கள் படி வாழ்வது என்பது சாத்தியமற்றவைகளையும் தாண்டிய ஒன்றாகிவிடுகிறது.
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment