நினைக்காத தருணங்களும்,
செவிதனை..
நேர்ந்திடும் நிமிடங்களில்
யதார்த்தம் கூறிடுவேன்,
பொதுப்பெயர் உமதென்று..
பேருந்துப் பயணங்கள்..
அருகிருப்பவன் அலைபேசியில்,
நான் பெயர் அறியா இவன்,
நான் முகம் அறியா அவனை,
உன் பெயர் கொண்டு விளிப்பான்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
பின்னிருக்கை கனவான்,
என் முன் இருப்பவனை
எனை விளித்து அழைப்பான்..
அதுவரைத் தெரியவில்லை,
அவன் பெயர் ரகசியங்கள்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
நினைவுதனை விடுக்க,
இசையைத் தேடிடுவேன்..
எதேச்சையாய் கேட்பது,
உன் குரலாகிடும்..
பெயர் உனது கொண்ட,
அவன் குரலும் ஆகிடும்..
இசை மட்டும் ரசித்திடுவேன்
புன்னகைகளுடன்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
வேறு பாடல் வரி மாற்ற,
தருணத்து இசை போல்..
"உன் வாசம் அடிக்கிற காத்து..."
சோதனை இதுவே..
உறவுகள் நிரம்பினும்,
அழகிய பல தருணம்..
என் மனம் உனைத்தேடும்,
அதனைப் படித்தது போல்..
அருகிருப்பவர் மொழிகள்,
"அலைபாயுதே படம் பார்த்தேன்
பல நாளைக்குப் பிறகு!"
புன்னகைகள் எனது,
வேறென்ன செய்திடுவேன்.
சாலையில் நடக்கையில்,
உன் பெயர் தாங்கிப் பேருந்து..
மெலிதாய் அதன் மேல்..
கரம் வருடல்,
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
பின் தொடர்ந்த உறவுக்கு,
புரிதலில்லை,
கவனமில்லை.
மழலை ஒன்று அழகாய்,
மழலையில் உன் பெயர் கூறும்..
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
அதை பதிவுசெய்து அனுப்பிட
ஆசை இருப்பினும்,
ஏனோ தவிர்த்துவிட்டேன்..
ஏனென்று எதுவுமின்றி.
நாள் முழுதும்,
மனம் அது
உன்னைத் தேடுகையில்
ஏனோ உன் அழைப்புகள்
அலைபேசி அதிலே
காக்கையும் பனம்பழமும்
நினைவில் நிழலாடும்..
மறுவிளிப்பில் விடை கேட்பாய்
புரியாத கதை அதுவெனக் கூறி..
நானும் விடையளிப்பேன்,
தவறாய் ஒன்றை,
தவறென்று தெரிந்தும்..
குறும்புகள் கொஞ்சம்,
எனக்கிங்கு உண்டு..
பிடித்திருக்காதுதான் உனக்கது..
எனைப்பற்றி கேள்வி இல்லை, உனைப்பற்றி அறிந்ததே..
எதிர்ப்பார்ப்பும் எனக்கில்லை,
எதிர்ப்பார்ப்பு இருந்திடினும்..
இப்பொழுதும் அந்நிலையே,
தோழியின் புரிதல்கள்..
எந்நிலை பற்றி,
உன் பெயர் கொண்டவன் பற்றி,
வியப்புகள் இருந்ததில்லை.
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்...
புன்னகைகளுடன்...
5 comments:
Is by any chance the name u referring to is 'Shakti'??? ;)
@Rachana : illa avanga appa selvaraj..
x-( :-X ... Not here..
சாலையில் நடக்கையில்,
//////உன் பெயர் தாங்கிப் பேருந்து..
மெலிதாய் அதன் மேல்..
கரம் வருடல்,
வியப்புகள் இருந்ததில்லை,
பொதுப் பெயர் காரணங்கள்.
நினைவுகள் இருப்பினும்..
பின் தொடர்ந்த உறவுக்கு,
புரிதலில்லை,
கவனமில்லை.////////
எதார்த்தங்களை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது . வாழ்த்துக்கள் .
ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
@ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ : தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்,ஊக்கங்களுக்கும் நன்றி :) வேண்டுகோளுக்கு இணங்க சரி செய்துவிட்டேன் மீண்டும் சொடுக்கி சரி பார்த்துக்கொள்ளவும் :)
Post a Comment