BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, April 13, 2011

எவ்வாறாயினும் குற்றம் குற்றமே..!

முன் குறிப்பு : இங்கு யாரும் அரசியல் பேசவில்லை.ஆக அரசியல் என்று நினைத்து படிக்கத் துவங்குபவர்களுக்கு,உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.
                          
                                இதைப் பதிவிடும் பொழுது மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது,ஆம்,ஏற்கனவே நடக்கும் பல குற்றங்கள் தொடர நான் இம்முறை உறுதுணை புரியவில்லை,எனினும் உறுதுணை புரிந்தே ஆகவேண்டும் என்கிற குற்ற உணர்ச்சி.குழப்புகிறேனோ?!"நான் இம்முறை தேர்தலை புறக்கணித்துவிட்டேன்..!,அதுதான் செய்தி.
தவறென்று தெரிந்தும்.பாரதி,ஜனநாயகம், நம் உரிமை கடமை என நண்பர்களிடத்தும் சுற்றி இருப்பவர்களிடத்தும் உரைத்திடும் நான்",அக்குற்றத்தை புரிந்துவிட்டேன்.நேற்று காலை இதனை நண்பர்களிடம் கூறியபோது "நீயா? நீயா ?.." என பாக்யராஜ் படத்தில் வரும் அதிர்ச்சிப் பைத்தியம் போலவே வசனங்களை கூறினர்,இதற்கெல்லாம் உச்சமாக தந்தையின் பதில்,"நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கல!",எனது விடை,"நானும்தான்!,சுத்தி நடக்கறதெல்லாம் பாத்து வெறுத்துட்டேன் பா!".இம்முறை அதுவும் எங்கள்  தொகுதியில் நிற்கும் கனவான்கள் அனைவரும் பல புண்ணியங்களை சேர்த்துவைத்துக் கொண்டுள்ளவர்கள்,சுயேட்சையையும் சேர்த்து.ஆக சுயேட்சைகளுக்காவது வாக்களிக்கலாம் என்ற எண்ணத்திலும் மண்."எனக்கு ஓட்டு போட விருப்பமில்லை" என்ற பொத்தானையாவது அழுத்தியிருக்கலாம் ,ஆனால் அது ஏனோ என்னை பயந்துபோனவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுமோ எனத் தோன்றியது.மேலும்,எந்த பொத்தானை அழுத்தினாலும் அழுத்தாவிட்டாலும்  இங்கு துரோகத்திற்கும்,"நாம் கே வாஸ்தே!" ஜனநாயகத்திற்க்கும்,அதை கண் மூடித்தனமாக பின் பற்றும் பல முழுக் கிறுக்கர்களுக்கும்தான் துணை நின்றாக வேண்டும்.இதற்காக ஏன் வீணாக ஒரு பதினாறும் பதினாறும்,முப்பத்தி இரண்டு ரூபாயை செலவு செய்வானேன் என்று சலிப்பும்,வெறுப்பும் கூடிய  எண்ணம் தோன்றிவிட்டது,ஒருவேளை பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தாலும் இதையே செய்திருக்கலாம்,ஆச்சரியப்படுவதற்கில்லை.  
சார்!,போலியோ சொட்டு மருந்திற்காக சிறுபிள்ளைகளுக்கு விரலில் மை இட்ட கை சார் இது.ஜனநாயகமும் தேர்தலும் வெறும் பெயர் அளவிலேயே என்கின்ற போது,அதே கரத்தால் ஒரு பாவத்தை செய்ய விரும்பவில்லை.
                                இங்கு சுற்றி இருப்பவர்களும் "நான் இந்த கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!","அந்த கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!", என்று கூறுகையில் ஏனோ இலவசம் என்ற வார்த்தையுடன் அவர்களது சுயநலமும்தான் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது,தனக்கு வேலை வாய்ப்பு தந்த ஒரே காரணத்திற்க்காக  "நான் அக்கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!" என்று காலம் காலமாகக் கூறிவரும் என் அன்னையும் இதில் அடக்கம்.இலவசம் என்ற ஒரே காரணத்திற்க்காக ஓட்டுரிமை என்ற பெயரில் நாம் மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்து வருவதை உணர்வதே/புரிந்துகொள்வதே  இல்லை.அதனால் யார் ஆட்சி செய்தால் என்ன? என்று எப்பொழுதுமே இல்லாத  "சீ!இந்த பழம் புளிக்கும்!", என்ற அலட்சியத்தனமே  இம்முறை எனக்குத் தோன்றியது.வாயளவில் போய்விடும் "மாற்றத்திற்காக ஓட்டளிப்போம்!" என்ற வசனம் இம்முறையேனும் செயல்படுத்தப்பட்டால்.அடுத்த முறையேனும் நான் "இவர்கள் மாறிவிட்டார்கள் நான் ஓட்டளிக்கிறேன்!",என்று அறிந்தே இந்த குற்றத்தை(?!) புரியாமல் இருப்பேன். 
பி.கு : நாட்டைதான் சுத்தம் செய்ய  இயலவில்லை எனினும் அறையையாவது சுத்தம் செய்யலாம் என இதை பதிவிட்டுக் கொண்டே என் அறையையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.சுத்தம் சோறு போடுமாம்!,இங்கு இவர்கள்  இத்தனை முறை ஓட்டு போட்டும்  நாடு சுத்தமாகவில்லை :)            

8 comments:

நிரூபன் said...

முன் குறிப்பு : இங்கு யாரும் அரசியல் பேசவில்லை.ஆக அரசியல் என்று நினைத்து படிக்கத் துவங்குபவர்களுக்கு,உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.//

ட்ரெயிலரே இவ்வளவு பலமாக இருக்கே சகோ...

நிரூபன் said...

மேலும்,எந்த பொத்தானை அழுத்தினாலும் அழுத்தாவிட்டாலும் இங்கு துரோகத்திற்கும்,"நாம் கே வாஸ்தே!"//

இந்தக் கருத்தில் யதார்த்தம் இருந்தாலும், ஓட்டுப் போடாது விடுவதால், நாங்கள் அனைவரும் ஒரு துரோகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பது நிஜம் தானே?

நிரூபன் said...

இங்கு சுற்றி இருப்பவர்களும் "நான் இந்த கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!","அந்த கட்சிக்கு ஓட்டிடப் போகிறேன்!", என்று கூறுகையில் ஏனோ இலவசம் என்ற வார்த்தையுடன் அவர்களது சுயநலமும்தான் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது,//

இது யதார்த்தம் கலந்த, சவுக்கடி...

நிரூபன் said...

இதில் அடக்கம்.இலவசம் என்ற ஒரே காரணத்திற்க்காக ஓட்டுரிமை என்ற பெயரில் நாம் மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்து வருவதை உணர்வதே/புரிந்துகொள்வதே இல்லை//

இதனை அனைவரும் முன்பே உணர்ந்திருந்தால் இத்தனை கோடிகளை இழக்க நேர்ந்திருக்காது, நாட்டின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் அபிவிருத்தியிலும் நாடு செழிப்படைந்திருக்கும்.

நிரூபன் said...

உங்கள் உள்ளத்து உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கையில் இது குற்றமாகப் படவில்லை..
காத்திரமான கருத்துக்களைக் கொண்டு உங்கள் உணர்வுகளை நியாயப்படுத்தியுள்ளீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

அறையையாவது சுத்தம் செய்கிறேன்
என்கிற வரிகளில்
சீர் கெட்ட சமூகத்தை
சீர்செய்ய்யத் துடிக்கும்
ஆதங்கம் தெளிவாகத் தெரிகிறது
நல்ல பதிவு
தொடர இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Aishwarya Govindarajan said...

@ramani sir, Thangalukkum iniya putthaandu nalvaazhthukkal :)

Aishwarya Govindarajan said...

@nirooban,
//ஓட்டுப் போடாது விடுவதால், நாங்கள் அனைவரும் ஒரு துரோகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பது நிஜம் தானே?//
adhanaaldhaan eppadi irundhaalum vellappovoargalukku avargalai peridhaagak karudhum indha makkalai madhitthu yaen veenaaga selavu seidhu kondu poyi oattu poda vanedum ena immudivukku vandhaen..maelum thangal varugakkum karutthupagirdhalukkum nandri :) :)