கூட்டுக் குடும்பமதில்,
மாலைத் தென்றலிலே,
காலைக் கதிரொளியில்,
நடுநிசி விழிப்புகளில்,
கானல் நண்பகலில்,
மாதம் மூன்று நாட்களில்,
சுயம் ததும்பும் ஸ்வரங்கள் தனில்,
நாளும் நகர்ந்திடும் ..
நொடிகளில் ஒன்றாய்..
இவை போல் பல,
அழகியதும்,
அமைதியுற்றும்,
அனுபவம் பல பிறந்தும்,
அதில் உணராத பல இறந்தும்,
மெலிதாய் இருள் சூழ்ந்தும்,
அனைத்தும் சேர்ந்ததுவாய்..
வானவில் வாழ்க்கை இது..
அனைத்திலும் தேடுவது,
அருகாமை தனை மட்டும்..
அன்பிற்குத் தகுதியற்றோள்,
இவள் என ஆகிடவே..
உருகி உருவாகும்,
மெழுகுவர்த்தி போல்..
கண்ணீரும்,
புன்னகையும்,
வானவில்,
நிறமற்றுப் போவதனால்..
2 comments:
எளிமையான வடிவில் அன்பின் வண்ணத்தை, மனித வாழ்வோடு ஒப்பிட்டு அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ.
Thangal varugaikkum Karutthukkum Nandri Niruban :-)
Post a Comment