BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, March 25, 2011

இசை எனக்கு..

தினம் ஒரு கணம்,   
எனில் தோன்றும் எண்ணமும்..
எண்ணத்திடை சலனமும்,
சலனமற்ற மௌனமும்..
மௌனம் முழுதாட்கொள்ளும், 
ஆத்மாவும்..
ஆத்மாவின் அர்த்தமும்,
என் பெண்மையும் முழுமையும்..
எனக்கு உயிர் தந்த உருவும்,
எனில் உயிர் தரும் அவனும்.. 
உருவறைக் கருவும்,
கருவின்று கசியும்
முதல் சிறு ஸ்வரமும்..
அதன் விரல் அசைவில்,
ஜனித்திடும் லயமும்..
உலகில் சுருங்காத,
என் அண்டமும்..
அண்டம் உறைவிக்கும்   
என் பரமும்,
பரம் மறைந்திருக்கும் வெளியும்..
வெளி படர்ந்திருக்கும் ஐந்தும்,
ஐந்து போல் ஆதியற்ற ஒன்றும்..

5 comments:

Vaibhav Srinivasan said...

விவரிக்க முடியா வடிவம் கொண்டிருந்த இசையை வார்த்தைகள் கொண்டு வர்ணனை செய்து நீ வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் அது என்று உணர்தியிருக்கிறாய் !!!

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், இயற்கையின் இன்பமே இசை என்னும் உலகில் நீங்கள் ஒரு வித்தியாசமான வடிவில் உங்கள் கவிதையினைப் படைத்திருக்கிறீர்கள்.

உங்கள் உடலின் ஒவ்வோர் பாகத்தினையும், வார்த்தைகளின் ஜாலத்தின் மூலம் வர்ணித்து இசையின் வடிவங்களை உணர்த்தியுள்ளீர்கள். கவிதை இசை போல் மனதினுள் ஒலியைப் பரப்பி நிற்கிறது.

Aishwarya Govindarajan said...

Varugaikkum karutthukkum Nandri vaibhav.

Raj said...

நல்லிசைபோல அதிர்வுகளை ஏற்படுத்தும் கவிதை!

Aishwarya Govindarajan said...

@Raj Nandri :-)