"சிறுமழை" என்ற ப்ளாகில் கண்டது,பார்த்ததும் எனக்கு அலைபேசியில் எப்பொழுதேனும் வரும் இது போன்ற குறுஞ்செய்திக் கேள்விகளும்,பள்ளி காலம் முடிக்கையில்(கல்லூரி நாட்களும் இதோ இன்னும் இரு மாதங்களில் முடியப் போகிறது ) நண்பர்கள் என்னிடமும் நான் அவர்களிடம் நீட்டிய புத்தகங்களும் நினைவில் வந்து விட்டது.காலையில் எழுந்து பார்த்தால் என் தோழிக்கும் எனக்குமாய் அந்த கேள்விகள் கார்த்திக்கிடமிருந்து (http://bit.ly/dIlGqr) மெயிலில்.குறுஞ்செய்திகளுக்கு விடையளித்த அதே பொறுமையுடன் இப்பொழுது.
எனக்கு பிடித்தவை சில….
பிடித்த நிறம் : neeeeeeeeeeeelam பிறகு வெள்ளை லாவெண்டர் கருப்பு முதல் மூன்று நிறங்களில் அதுவாகவே சிறுவயதிலிருந்தே என்னிடம் பொருள்களும் ஆடைகளும் போதும் எனும் அளவிற்கு சேர்ந்துவிட்டது.போதும் என்று நானும் கூறவில்லை :D .கருப்புக்கு வீட்டில் தடா,அபசகுனம் என்கிறார்கள்.
பிடித்த உணவு :தோசை,அதுவும் எனக்கு நானே தயார் செய்துகொள்வது (என் தம்பி என் தோசைக்கு விசிறி ,ஒரு விளம்பரம்), அம்மாவின் சாத்தமுது(ரசம்) நானும் கற்றுக்கொண்டுவிட்டேன் காரம் சற்று கூடுதலுடன்,வெங்காயக் குழம்பு ,எப்பொழுதும் போல் புளியோதரை ,சக்கரைப் பொங்கல்,தயிர் சாதம்.
பிடித்த மாதம் : ஆங்கில மாதமா? தமிழ் மாதமா?.. அக்டோபர் என்று வைத்துக்கொள்ளுங்களேன்
பிடித்த பாடல்:எப்பொழுதும் கூறும் பதில்தான், தனியாக வேண்டுமானால் இம்மாதம் கேட்ட "டாப் 25 பாடல்கள்" எனப் பதிவிடுகிறேன்
பிடித்த படம்:இது முந்தையதை விட மிகக் கடினம்.நல்ல வேலை பிடித்த புத்தகம் என்ற கேள்வி எழவில்லை.
பிடித்த விளையாட்டு: கிரிக்கெட் மட்டையால் தம்பியை அடிப்பது டென்னிஸ் மட்டையால் அவன் என்னை அடிப்பது.பாட்டுக்குப் பாட்டு.தந்தையுடன் எப்பொழுதாவது செஸ்.!
பிடித்த பருவம்(சீசன்):சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ!,மார்கழிப்பனி கலர் கோலம் போட்டுவிட்டு அதன் மேல் பனி கரைந்து உருகி சூரியன் தோன்றும் நொடி வரை,வெயிலோட வெளையாடி!!(சொல்லித்தான் ஆகவேண்டும்,பிறகு கேள்வி எழலாம் "மழையை ரசிக்கத்தெரிந்தவர்களுக்கு வெயில் ஏன் பிடிக்கவில்லை என!)...
பிடித்த வார நாள்: வெள்ளி மாலை ஆறு மணி தொடங்கி ஞாயிறு 11 :59 Pm முடிய எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
பிடித்த ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்: சாக்லேட்
பிடித்த பொழுது: அந்தி மாலை தென்றல் காற்று..அவ்வப்பொழுது அழகு நிலவு இரவுகள்.
பிடித்த அயல்நாட்டு நடிகர்: டாம் ஹாங்க்ஸ், டி காப்ரியோ பட்டியல் மிக நீளம்.
தற்போதைய….
மனநிலை:தோழிக்கு அலுவலகத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் வந்த மகிழ்ச்சி.
உடை: லாவண்டர் வெள்ளை சல்வார்,பல்லாவரம் ரயில் கேட் அருகே ப்ரீடம் எனும் கடையில் ருபாய் 256 க்கு நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கியது.நல்ல கடை நல்ல தரம் அந்தக் கடையில் நீங்களும் துணிமணிகளை வாங்கலாம்.நல்லவிலைக்குக் கிடைக்கும். (இந்த கேள்வி மிகத் தேவையா? என்று இவ்வாறும் மறைமுகமாகக் கேட்கலாம்).
கணிணியின் முகப்பு: அழகான ஒரு கொல்லாஜ்.
சூழல்:மின் விசிறி சுற்றிக்கொண்டு இருக்கிறது, எதிர் காட் ஆளுயர டெட்டி பியர் என்னை முறைத்துக்கொண்டு இருக்கிறது."என் வானம் எங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ.." என்ற வரிகள் மடி கணினியிலிருந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
எண்ணம்: பலரும்..பலதும்...எவராவது ஒரு நல்ல புத்தகம் படிக்க எனக்கே எனக்கென்று அளித்தால் நன்றாக இருக்குமென்றும்.
ரிங் டோன் : சொல்லியே தீர வேண்டுமா?! அவசியம் தெரிய வேண்டும் என்றால் எனக்கு இக்கேள்விகளை அனுப்பியவரையே கேட்டு தெரிந்துகொள்ளவும் :P
காலர் ட்யூன்: சுய சம்பாத்தியத்திற்க்காய் வெய்டிங்..
ஐந்து “முதல்”கள்….
முதல் நெருங்கிய தோழன் : எதிர் வீட்டு நிசார்,பிள்ளை பருவத்திலிருந்தே,குடும்ப நண்பர்கள் இரு குடும்பத்தினரும் சுமார் 40 வருடங்களாக, உருளைக்கிழங்கு போண்டா,முள்ளம்பன்றி என்று நாங்கள் வைத்த பெயர் அவனுக்கு,பள்ளியில்.
முதல் நெருங்கிய தோழி : மகாலட்சுமி ,மூன்றாம் வகுப்பிலிருந்து, இன்று வரையும் அவளே... :) http://bit.ly/bOEoWa
முதல் காதல் மலர்ந்த வயது : முதல் ஈர்ப்பு எனலாமே பொருத்தமாக இருக்கும்!?... எதுவாயினும்,இங்கு,இதற்கு விடையளிக்கப் பிடிக்கவில்லை.
முதல் செல்லப்பிராணி: பல்லி, நம்பமுடியவில்லை அல்லவா? இப்பொழுது நினைத்தால் என்னால் கூடதான்.வீட்டில்,நான் சாப்பிடும் பொழுதெல்லாம் வந்து அருகில் அமர்ந்து கொள்ளும்.எனக்கு அம்மா தரும் காய்கறிகள் அதற்கு உணவு.பின் மாயமாகி விட்டது.முதலை அல்லது ஆமை எதிர்காலப் பட்டியலில் உள்ளது.
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்: தேவர் மகன், மூன்று வயது என நினைக்கிறேன் அப்பொழுது. "போற்றிப்பாடடி பொன்னே" பாடலுக்கு வீட்டு மர பெஞ்சின் மேல் தத்தக்கா பித்தக்கா என ஆடிய நினைவு இன்றும்.
ஆறு “கடைசி”கள்
கடைசி சிகரெட்: அப்பா, என் கண் முன் சிகரெட் பிடிக்க நான் அவரைப் பார்த்ததும் அவர் பின் அதை மறைக்க . அது என்னவென்று தெரியாமல் அவரிடமிருந்து அதைப் பிடுங்கி நான் தூர எறிந்தது .அப்பொழுது எனக்கு வயது பத்து இருந்திருக்கலாம்.இன்றுவரை அப்பாவின் கடைசி சிகரெட் அது, நான் தொட்ட முதல் மற்றும் கடைசி சிகரெட்டும் அது.
குடித்த திரவம்: காபி
கார் பயணம்: தோழியுடன் பிச்சாவரம்.
பார்த்த படம் : In a Better world சிறந்த வேற்று மொழிப் படத்திற்கான இவ்வருடத்திய ஆஸ்கார் வென்ற படம்
தொலைபேசி உரையாடல்: அம்மாவிடம் காரடையான் நோன்பு பற்றி நேற்று இரவு பதினோரு மணிக்கு.
படித்த புத்தகம்: மென் புத்தகங்கள் கணக்கில் உண்டா?! அவ்வாறாயின் தபு சங்கரின் "கண் மையில் எழுதிய கவிதைகள்".
நீங்கள் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறார்களா? உங்களைப் பொறுத்தவரை எது சட்டம்..?!.நமக்கேற்றவாறுதான் மாற்றிககொள்கிறோமே அதனை.
நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? பாசத்தால்..?!!..அவ்வாறாயின், பலமுறை
நீங்கள் எப்போதாவது டீவியில் வந்ததுண்டா? எவரேனும் தப்பித் தவறி 1994 சிதம்பரம் நாட்டியாஞ்சலியை தூர்தர்ஷனில் கண்டிருந்தால் நான் பிரபலமாகி இருப்பேன்.பார்வையாளராக அம்மாவின் மடியில் அமர்ந்தபடி.
நீங்கள் எப்போதாவது பொய் சொன்னது உண்டா? நான் மனிதம்.சொன்னது பொய்யென்று உடனடியாய்க் கூறிவிடுவதும் என் இயல்பு.
நீங்கள் முன்பின் தெரியாத பெண்ணிற்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா? எதிர் வீட்டிற்கு வந்த ஸ்னேஹா எனும் பெண்குழந்தைக்கு,எவர் குழந்தை என்று தெரிந்ததில்லை கேட்டுப் பெயர் தெரிந்துகொண்டேன், சிரித்தது..தூக்கி முத்தமிட்டேன்..! (மீண்டும்,என்னக் கேள்வி இது!? )
இன்று செய்த ஆறு செயல்கள் : வளையோசை பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு அதனுடனே முணுமுணுத்தது ,கேள்வி கேட்டது,எழுதியது ,உனக்கு 100 இயர்ஸ் என்று நண்பன் ஒருவனிடம் சொன்னது, ப்ராஜெக்ட் ஹெட் எங்கள் ஆசிரியரை சந்தித்தது.ஜிலேபி உண்டது.
நீங்கள் இன்று சென்ற ஐந்து இடங்கள்: இரண்டு டிபார்ட்மென்ட்களுக்குசென்றது ,காபி ஷாப், காலை தோசைக்கு கேண்டீன்.My Friend Ganesha -வை கோவிலில் சந்தித்தது.
இப்போது காதால் கேட்கும் நான்கு ஒலிகள் : "ஏய்!.." என்று "புஜ்ஜிகாடு" எனும் ஒரு தெலுங்குப் படத்தின் வசனம்,அதை கேட்டு சிரிக்கும் அறைத்தோழியின் ஹா ஹா ஹா, இதற்கிடையில் என் சத்தமும் இதோ எனும் மின் விசிறியின் சத்தம்.இதைவிட சத்தமாக ஆனால் அழகாக,லதா மங்கேஷ்கரின் குரல் ராஜாவின் இசையில்.
நீங்கள் சொல்லத்தோன்றியதை தயங்காமல் எந்த மூன்று பேரிடம் சொல்வீர் கள்: அப்பா,நட்பு இன்றுவரை. அடுத்த ஒரு இடம் இன்னும் காலியாக.
போரடிக்கும் போது செய்யும் இரண்டு செயல்கள்: புத்தகம்(அ)இயற்கை,இசை.(போர் அடிக்காத பொழுதுகளிலும்) இரண்டு மட்டும்தான் கூறவேண்டுமா?!செயல்கள் பல உண்டே..
இறப்பதற்குள் செய்ய விரும்பும் ஒரு காரியம் : ஆத்மார்த்தமாக வாழ்ந்தோம் என்று இறப்பதற்கு முன் நொடி நினைப்பது.
1 comments:
"ஆத்மார்த்தமாய் வாழ்ந்தோம் என
அந்தக் கடைசி நொடியில் நினைப்பது,..."
அந்த ஒரு சொற்றொடர் உங்களை
முழுமையாகச் சொல்லிப் போகிறது
எல்லா வளமும் எல்லா நலமும்
உறுதியாய் உங்கள் வீட்டு வாசலிலேயே
எப்போதும் தவமிருக்கும்
நல்ல மனந்திறந்த பதில்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
Post a Comment