சொல்லநினைக்கிறேன்..
நட்புக் கூட்டம் உனது,
மிகவே அழகு என்று..
தயக்கங்கள் சிறிது..
எனக்கு உண்டாயினும்..
உன்னவளாய் அதனுடன்,
ஒன்றிவிட எண்ணம்தான்.
தோன்றும் இடைவெளியில்,
எண்ணம் கானல் நீராய்..
அரியதாய் அழகியதாய்,
இயற்கையில் கண்டிட ..
மனம்தான் உன்னிடம்,
சொல்லத் துடித்திடும்..
தோன்றும் இடைவெளியில்,
துடிப்புகள் சப்தமின்றி..
எனக்கே உரித்தாய்,
சிலவற்றை செய்தாலும்..
நீயற்ற நிமிடங்கள்,
நீ உணரச் சொன்னாலும்..
ஏனோ அதைத் தவறாய் மனம்,
புரிந்திருக்கும் சில நொடிகள்..
யதார்த்தம்,
தவறில்லை..
தோன்றும் இடைவெளியில்,
என் விளக்கங்கள் வேலையற்று..
அழகாய் உனை ஏனோ..
பெயர் கூறி அழைக்க எண்ணம்..
வெட்கங்களும் தயக்கங்களும்,
கரம்கோர்த்துக் கொண்டுவிடும்.
உந்தன் குரல்தனை,
கேட்கும் நொடிகளில்..
தோன்றும் இடைவெளியில்
எண்ணம் சிற்றெறும்பாய்..
நொறுங்கித்தான் போய்விட்டேன்,
இடைவெளிகள் நிலையென்று,
அவள் சொன்ன கணம் அதிலே..
தோன்றும் இடைவெளியில்,
மறைத்தவையில் இதுவும் ஒன்றாய்.
1 comments:
மிக அருமை
தோன்றும் இடைவெளியில்.....
சொல்ல நினைப்பதை மிகச் சரியாக
எல்லோராலும் சொல்ல முடிவதில்லை
வார்த்தைகளை வசப்படுத்தும் கலையில்
வல்லவராய் இருக்கிறீர்கள்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment