புரிவதில்லை சில நேரம்,
அருகிருந்தால் அறிந்திடலாம்,
தொடர்பிருந்தால் புரிந்திடலாம்,
பௌர்ணமி நிலவாய்தான்..
நாங்கள் பேசுவதும்,
தேய்பிறை கடைநிலையாய்..
பேசும் நொடிகளும்.. இப்பொழுதும் அதுதானா?
கேள்வி அது அவனது,
என்ன கேள்வி இது?!..
மனதில் பதில் எனது..
வேறென்ன இருந்திடும்!?
அவனுக்காய் பதில் எனது..
எதிர்பார்த்த கேள்விகள்,
ஏனோ அங்கில்லை..
பதில் எனது,
அவனுக்காய் இருந்தது..
தயக்கங்கள் இருப்பினும்,
விடையதனை திணித்திட்டேன்..
பெண்ணாய் அச்செயல்
பிடிக்கவில்லை எனினும்..
ஆனால்,
யாரிடம் கூறிடுவேன்..
அவனிடம் கூறாது.
புரிவதில்லை சிலநேரம்,
அவன் மனநிலை எனக்கிங்கு..
தொலைவிருந்து அறிந்திட,
இறையும் நானில்லை..
அருகிருக்கும் நிலை,
தற்பொழுது எனக்கில்லை..
எப்பொழுதும் இல்லையா ?
அதுவும் தெரியவில்லை..
விடைகள் தேடுகிறேன்,
புரியாமல் போகிறது..
கண்ணீர்துளிகள் எவ்வாறு,
சர்க்கரை ஆகும்...
2 comments:
இந்தக் கவிதையும் புரிய சற்று நேரம் பிடித்தாலும், இன்னும் முழுமையாக புரியவில்லை....ஆனாலும் "தேய்பிறை முதல் நிலையாய்" என்பது பொளர்ணமிக்கு அடுத்து வருவது....இது பொருள் பிழையா ? அல்லது எனக்கு புரியாத பிழையா? மிகக் குறைந்த கால அளவை சொல்ல, "வளர் பிறையின் முதல் நிலை" அல்லது "தேய் பிறையின் கடை நிலை"யே சரியென்றென்னுகிறேன்.
பௌர்ணமி நிலவாய் என்று கூறியது எப்பொழுதேனும் தோன்றும் பௌர்ணமி நிலவு போல்தான் நாங்கள் பேசும் நொடிகளும் வாய்க்கிறது மேலும் அப்பேசும் தருணங்களும் தேய்பிறையின் கடைநிலை போன்றதே என்பதே சரி,பிழை சுட்டிக்காட்டியதற்கு நன்றி திருத்திவிட்டேன்.. :-)
Post a Comment